வெளிநாட்டுப் பயணச் செலவுகள் நாடாளுமன்றத்தில் அம்பலம்; ரணில் ரூ.1,010 மில்லியன்; அநுர ரூ.31.7 மில்லியன் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 1,010 மில்லியன் ரூபாயும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 8 பயணங்களுக்கு 31.7 மில்லியன் ரூபாயும் செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணச் செலவுகள் நாடாளுமன்றத்தில் அம்பலம்; ரணில் ரூ.1,010 மில்லியன்; அநுர ரூ.31.7 மில்லியன் !
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 26 மாத பதவிக்காலத்தில் 33 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதே காலப்பகுதியில் 8 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 31.7 மில்லியன் ரூபாயை மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று சனிக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட விஜயம் முதல் 2024ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், அப்பயணங்களில் 421 பேர் அவருடன் இணைந்து சென்றிருந்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பதவிக்காலத்தின் முதல் 26 மாதங்களில் 8 வெளிநாட்டுப் பயணங்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளதுடன், அதற்கான மொத்தச் செலவு 31.7 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், இந்த வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எவ்வித மேலதிக அல்லது இணைந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT