ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழு புதுடில்லி பயணம்: ஜெய்சங்கர் மற்றும் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு

ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு புதுடில்லி சென்றுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாஜக தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர்.

ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழு புதுடில்லி பயணம்: ஜெய்சங்கர் மற்றும் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தூதுக்குழு திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயமாகப் புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

நான்கு நாள்கள் டில்லியில் தங்கியிருக்கும் இக்குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த விஜயத்தின் போது, பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் மூத்த தலைவர்களையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதுடன், இந்திய நாடாளுமன்றம் மற்றும் பாஜகவின் டெல்லி மாநில அலுவலகத்திற்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.

மேலும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினரையும் சந்தித்து இவர்கள் உரையாடவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டில்லிக்குச் சென்றுள்ள ரில்வின் சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அபுபகர் அதம்பாவா, யாழ் மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேசத் துறை உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவிற்கும் ஜேவிபிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுமே ரில்வின் சில்வா தலைமையிலான குழுவின் டில்லிப் பயணத்தின் பிரதான நோக்கம் என பாஜகவின் வெளியுறவுத் துறைப் பொறுப்பாளர் விஜய் சௌதைவாலே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT