ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை: முன்னிலையாகாவிடின் விமான நிலையத்தில் கைது செய்ய நடவடிக்கை

விசாரணைகளுக்கு முன்னிலையாகத் தவறினால் ஷிரந்தி ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, நாடு திரும்பும்போது கைது செய்ய பொலிஸ் நிதி மோசடிக் குற்றத்தடுப்புப் பிரிவு தீர்மானித்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை: முன்னிலையாகாவிடின் விமான நிலையத்தில் கைது செய்ய நடவடிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அழைப்பாணையை அனுப்புவதற்கு பொலிஸ் நிதி மோசடிக் குற்றத்தடுப்புப் பிரிவு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரத்துக்குள் நிதி மோசடிக் குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு நினைவூட்டல் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் தங்காலை இல்லத்துக்கும், நுகேகொடையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்துக்கும் குறித்த அழைப்பாணைக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படும் தினத்தில் விசாரணைகளுக்காக ஷிரந்தி ராஜபக்ஷ முன்னிலையாகத் தவறும்பட்சத்தில், அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவொன்றைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.

அதனூடாக, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே வைத்து அவரைக் கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT