சஜித் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு இருமுனை போட்டி?

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

சஜித் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு இருமுனை போட்டி?
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் உள்ள லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையில் இந்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரதமராக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க வேண்டுமென மொனராகலை மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை வைத்துள்ளதாககூம் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் நாளை (வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறுதி முடிவை இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT