35% அதிகரித்த பஸ் கட்டணம் - குறைந்தபட்ச கட்டணம் 27
இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 27 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
