ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்பு - பாதுகாப்பு அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்பு - பாதுகாப்பு அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததாகவும், அதன்படி 40 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், எழுந்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனிடையே, வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதற்கு  தேர்தல் அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக சுமார் 1000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT