உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி

நேற்று ரம்புக்கணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

உயிரிழந்த இளைஞருக்கு காலி முகத்திடலில் அஞ்சலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ரம்புக்கணை போராட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று ரம்புக்கணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 08 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT