முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடையில் உள்ள அரச நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (07) காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நீதிமன்றத்தில் ஆஜராகாமால் தவிர்த்து வந்ததால் அவரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் அமைச்சரை, வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT