விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை: 9 அமைச்சர்களின் முழு விவரங்கள்

புதிய அமைச்சரவையில் மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை: 9 அமைச்சர்களின் முழு விவரங்கள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், முதல் கட்டமாக 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மூன்று முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்களின் விவரங்கள்:

1. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்): தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான இவர், சென்னை தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இதன்மூலம் புதுச்சேரி மற்றும் தமிழகம் என இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினரானவர் என்ற தனிப்பெருமையைப் பெறுகிறார்.

2. செங்கோட்டையன்: அமைச்சரவையில் மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அதிமுகவில் பலமுறை அமைச்சராக இருந்தவர், கடந்த 2025-இல் அக்கட்சியிலிருந்து விலகி விஜயுடன் இணைந்தார். தனது சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

3. ஆதவ் அர்ஜுனா: தேர்தல் வியூக வகுப்பாளராக அறியப்பட்ட இவர், வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரைத் தோற்கடித்தார். கூடைப்பந்து சம்மேளனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

4. அருண்ராஜ்: முன்னாள் ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியும் மருத்துவருமான இவர், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

5. சிடிஆர் நிர்மல்குமார்: பாஜக மற்றும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

6. ராஜ்மோகன் ஆறுமுகம்: ஊடகவியலாளராகவும் நடிகராகவும் அறியப்பட்ட இவர், எழும்பூர் தனித் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

7. பிரபு: மருத்துவரான இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தோற்கடித்தார். காரைக்குடிக்கென 'மிஷன் 2030' என்ற 15 முக்கிய செயல்திட்டங்களை வைத்துள்ளார்.

8. கீர்த்தனா: 29 வயதான இவர் அமைச்சரவையின் இளமையான அமைச்சர் ஆவார். சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

9. வெங்கடரமணன்: மைலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தவெகவின் பொருளாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த புதிய அமைச்சரவையில் மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -