கணினி பராமரிப்பு பணி: ஜூலை 30, 31ஆம் திகதிகளில்  EPF சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்த இரண்டு நாட்களிலும் EPF நன்மைகள் வழங்குதல் மற்றும் புதிய பதிவுகள் போன்ற சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும்.
கணினி பராமரிப்பு பணி: ஜூலை 30, 31ஆம் திகதிகளில்  EPF சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தொழிலாளர் திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, 2026 ஜூலை 30 மற்றும் 31ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதி (EPF) தரவுத்தளம் மற்றும் டிஜிட்டல் EPF முறைமை தொடர்பான பொதுச் சேவைகள்  கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வடலியத்த இது குறித்து தெரிவிக்கையில், “இந்த தற்காலிக சேவை நிறுத்தம் திணைக்களத்தின் தலைமையகம் மட்டுமன்றி, அனைத்து பிராந்திய, மாவட்ட மற்றும் துணை மாவட்டத் தொழிலாளர் அலுவலகங்களையும் பாதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த இரண்டு நாட்களிலும் EPF நன்மைகள் வழங்குதல் மற்றும் புதிய பதிவுகள் போன்ற சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

மேற்படி திகதிகளில் சேவைகளைப் பெற ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்கள், அதற்குப் பதிலாக அடுத்த ஒரு மாத காலத்துக்குள் ஏதேனும் ஒரு வேலை நாளில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அலுவலகத்துக்குச் சென்று தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர