வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

அரச ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்கு கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அரச ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வாரத்தில் கடமையாற்றும் ஒருநாளை அரச விடுமுறை தினமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT