திம்புலாகல ஆரண்ய சேனாசனாவில் மின்சாரம் துண்டிப்பு

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு ஏற்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.

திம்புலாகல ஆரண்ய சேனாசனாவில் மின்சாரம் துண்டிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

திம்புலாகல ஆரண்ய சேனாசனா

வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தாமை காரணமாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு ஏற்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை எனவும்,  இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இந்த சேனாசனத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு அரசாங்கமும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கி வருவதாகவும், நிலைய தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலுவை 5 இலட்சத்தை தாண்டியதால் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT