யாழ்ப்பாணத்தில் 200ஐ தாண்டிய காற்றின் தரக் குறியீடு! கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குத் தீங்கான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 200ஐ தாண்டிய காற்றின் தரக் குறியீடு! கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (19) காலை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, யாழ்ப்பாணத்தின் காற்றின் தரக் குறியீடு 200 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. அத்துடன், இன்று காலை 7.05 மணியளவில் பதிவான தரவுகளின்படி பத்தரமுல்லையில் 179 ஆகவும், சிலாபத்தில் 165 ஆகவும், கிளிநொச்சி மற்றும் அநுராதபுரத்தில் தலா 158 ஆகவும், திருகோணமலையில் 151ஆகவும் காற்றின் தரக் குறியீடு உயர்வடைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்திற்குத் தீங்கான மட்டத்தில் காணப்படுவதால், பொதுமக்களுக்குச் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, அப்பகுதிகளில் வசிக்கும் சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ள நபர்கள் KN 95 ரக முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், திறந்தவெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT