நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை கூறியுள்ளது.
இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு ஏற்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.
எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய தினம் நாட்டில் மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.