ஜனாதிபதி  சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அரசியலமைப்பு, நீதித்துறை மற்றும் மரபுக்கு மதிப்பளித்தே ஜனாதிபதி எப்போதும் முடிவுகளை எடுக்கிறார் என்று பிரதமர் ஹரினி ஹரிணி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் - பிரதமர் ஹரிணி அமரசூரிய
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசியலமைப்பு, நீதித்துறை மற்றும் மரபுக்கு மதிப்பளித்தே ஜனாதிபதி எப்போதும் முடிவுகளை எடுக்கிறார் என்று பிரதமர் ஹரினி ஹரிணி தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் பிரதமர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த பிரதமர், "இது ஒரு நீதித்துறை செயல்முறை. ஒரு நீதித்துறை முடிவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக நாம் நீதித்துறையிடமிருந்தே ஆலோசனை பெற வேண்டும். ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பவர் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் புத்திசாலித்தனமாகவும், நாட்டின் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டும் முடிவுகளை எடுக்கிறார்.

அவர் நீதித்துறையையும் மதிக்கிறார். அவர் நமது நாட்டின் மரபையும் மதிக்கிறார். அவர் நமது அரசியலமைப்பையும் மதிக்கிறார். அதற்கேற்ப, ஜனாதிபதி இப்போதும் எதிர்காலத்திலும் முடிவுகளை எடுப்பார்" என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT