இலங்கை சொத்துகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  ஆதரவு!

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சொத்துகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  ஆதரவு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சொத்துகளை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது  வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுவிட்சர்லாந்து  தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்  இன்று (24) நடைபெற்றது. இதன்போதே  தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும்   "Clean Sri Lanka" திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும்  நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து தூதுவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT