மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

பிரதான சந்தேகநபரின் சாரதிக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய மூவரும்  எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (09) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபர், உயிரிழந்த மாணவியின் 19 வயதுடைய நண்பி மற்றும் அவரது காதலன் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 16 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேசத்தின் உதவி வகுப்பு ஆசிரியர் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT