இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமாரவை நேற்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக, இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.