கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான பரிசீலனை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதை தடை செய்யும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் மேலதிக பரிசீலனையை ஜூன் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகர, செயல் பணிப்பாளர் மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மேலதிக பரிசீலனைக்காக ஜூன் 24 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.