2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு புதுக்கடை மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.
ஜேர்மன் ஊடக நிறுவனமான 'Deutsche Welle'இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது