ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. 
ஆசிய கோப்பை 2023 - ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. 

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் பங்களாதேஷ் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில் நேற்று நடைபெற்றம் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். 

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - திமுத் கருணரத்ன இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கருணரத்ன 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்க 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - சரித் அசலங்க இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் சரித் அசலங்க 36 ரன்களிலும், தனஞ்செய டி சில்வா 14 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குசல் மெண்டிஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்களில் ரன் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். 

இறுதியில் துனித் வெல்லலகே - மஹீஷ் தீக்‌ஷனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. 

இதில் தீக்‌ஷனா 28 ரன்களையும், வெல்லலகே 33 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் இலக்கை எட்டினால், ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறமுடியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக அதிரடி வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் 7 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைபும் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் இணைந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து களமிறங்கிய முகமது நபி முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கினார்.

ஆசிய கோப்பை 2023 - ஹிட்மேன் ஆடிய ருத்ரதாண்டவம்.. நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முகமது நபி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி 24 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டத்தை ஆஃப்கானிஸ்தான் பக்கம் திருப்பினார். பின் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 65 ரன்களை எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தது.

அதன்பின் களமிறங்கிய கரிம் ஜானத் 22 ரன்களுக்கும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 59 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரானும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. 

அதில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியால் 37.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 4 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -