பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆண்டு ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 ஆண்டு ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 கல்வியாண்டின் 2ஆம் தவணை ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி முடிவடையவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

2023ம் ஆண்டின் 3ஆம் தவணை பெப்ரவரி 16ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அஸ்வெசும கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை - அமைச்சரின் அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தொற்றால் பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து ஏற்பட்ட தாமதங்கனை சீர்செய்யும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பனவற்றை உரிய காலப்பகுதியில் நடத்தி முடிப்பது இந்தத் தவணை மாற்றத்தின் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை  பாடசாலை அதிபர்களுக்கு நிதி அலுவலக நிர்வாக நடவடிக்கைகளை இலகுவான முறையில் மேற்கொள்வதற்கான அபிவிருத்தி அதிகாரிகளுடன் கூடிய புதிய சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர்விநியோக கட்டணப் பட்டியல்களில் சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT