அஸ்வெசும கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை - அமைச்சரின் அறிவிப்பு

பயனாளிகள், எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து, அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை - அமைச்சரின் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிய முறைமை வரும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில், அவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், பயனாளிகள், எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து, அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்றைய தினம் வழமைபோல திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவசியம் ஏற்படின், நாளைய தினமும் மக்கள் வங்கிக் கிளைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT