புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா அறிவிப்பு

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் செப்டம்பர் 15ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தினத்தில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற எந்தவொரு வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை கொண்டாடுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார்.

தனது உத்தியோபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலம் ஒவ்வொரு தனி மனிதனும், தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு கருத்தைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,  இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாரா இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT