சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு

இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்கிறது. நிதி உதவிகளை பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு வழங்கி வருகின்றது.

சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில், 
நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயற்படுத்தலின் கீழ், கிராமிய உற்பத்திகளை பொதியிடும் நிலையம் மற்றும் கிராமிய உற்பத்திகளுக்கான கண்காட்சியும், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில், நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் வினோஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டுத் திட்டச் செயலாளர் புவனேஸ்வரி சபாரத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா, நிஸ்கோ பணிப்பாளர் சிறிவர்த்தன, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி, கிழக்கு மாகாண சொற்பொழிவாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் யுவஸ்ரீ கலா பாரதி  சிவஸ்ரீ க.வி. பிரமீன் சர்மா, சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன், அகோரமாரியம்மன் ஆலயத்தின் செயலாளர் அழகுராஜன், உப தலைவர் மோகன், கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் இளங்கோபன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இஸ்மாயில், மட்டக்களப்பு தரவை - 2 கிராம சேவகர் பரீட், சமூர்த்தி உத்தியோகத்தர் ஹிதாயா கலந்துகொண்டதுடன், நியூ சன் ஸ்டார் இளைஞர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, கிராமிய இளைஞர் உற்பத்திகளைப் பொதியிடும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 23 இளைஞர்களினால் செய்யப்பட்ட சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 

மேலும், 08 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மாதாந்த புலமைப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் போது பல நாடுகளில் சமூக மற்றும் சமய சேவைகளைச் செய்துவரும் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டுத் திட்டச் செயலாளர் புவனேஸ்வரி சபாரத்தினம் கௌரவிக்கப்பட்டார். 

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடைசெய்யப்பட்டு வருகின்றன. இதனால் சூழல் நேயமிக்க பயன்பாட்டுப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்புக்கள் உள்ளன. 

இப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பயன்பாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்து வருகின்றது.

மேலும், கிராமத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இதற்கான நிதி உதவிகளை பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT