சிறுவர்களின் குரலுக்கு செவிசாய்த்து, கனவுகளுக்கு இடமளிப்போம்! ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய செய்தி

சிறுவர்களை வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்கவும், திறன் அடிப்படையிலான கல்வி முறையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் குரலுக்கு செவிசாய்த்து, கனவுகளுக்கு இடமளிப்போம்! ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய செய்தி
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறுவர்கள் நாட்டின் பெறுமதிமிக்க பொக்கிஷம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

நாளைய நாட்டின் போக்கை இன்றைய சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவையே தீர்மானிக்கின்றன என்றும், அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, கனவுகளுக்கு இடமளித்து, திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் நாடொன்றை உருவாக்குவதே தமது இலக்கு என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

சாதி, மதம், பொருளாதார நிலை அல்லது புவியியல் பின்னணி போன்ற எந்தவொரு காரணமும் சிறுவர்களின் கல்விக்கோ, வளர்ச்சிப்போக்கோ தடையாக அமையக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்ப, பெற்றோருக்குச் சுமையின்றி, நவீன உலகுக்கு உகந்த திறன் அடிப்படையிலான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துவது மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட திட்டங்கள் நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலையற்ற பொருளாதார பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்து சிறந்ததொரு எதிர்காலத்தை வழங்குவதற்காக நாட்டின் பொருளாதாரம் சீரான பாதையில் வழிநடத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளம் தலைமுறையைக் காக்க “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT