உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை... வெளியான தகவல்!

நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை... வெளியான தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை சந்தையில் பெருமளவு அதிகரித்துடன் தற்போது ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 600 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில், நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் மூலம் வெங்காயம் மாபியாவை முறியடிக்க முடியும் என அதன் தலைவி ஹஷினி சில்வா கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் அதிக தேவை இருப்பதால், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்ளூரில் வெங்காயம் தட்டுப்பாட்டின் பின்னணியில் மாபியா இருப்பதால், ஒரு மாதம் வெங்காயத்தை உட்கொள்வதை நிறுத்தினால், இந்த மாபியாவை முறியடிக்க முடியும் என ஹஷினி சில்வா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ஏன் நிர்ணயிக்க முடியாது என ஹஷினி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT