தோனியை போல் கேப்டன்சி செய்ய யாராலும் முடியாது.. கவுதம் கம்பீர்!

1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான். 

தோனியை போல் கேப்டன்சி செய்ய யாராலும் முடியாது.. கவுதம் கம்பீர்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான். 

சேவாக் மற்றும் சச்சின் ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்ததும் நிதானமாக விளையாடி இலங்கை அணியை வெளுத்து கட்டியவர் கவுதம் கம்பீர். கடைசியில் தோனி அதிரடியாக ஆட்டத்தை முடித்து இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதையடுத்து ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை வென்றது குறித்து பேசும் போதும், தோனி மட்டும் உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை. கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் இணைந்து தான் உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்றோம் என்று பேசி வந்தார். 

அதுமட்டுமல்லாமல் தோனி மீது ஏராளமான முறை வன்மத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் தோனி ரசிகர்களும் கம்பீரை பார்க்கும் போதெல்லாம் தோனி.. தோனி.. என்று கோஷம் எழுப்பி அவரை கோபப்படுத்தி வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே கவுதம் கம்பீர் தோனியின் கொள்கை பரப்பு செயலாளர் போல் நடந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன் தோனி குறித்து கம்பீர் பேசுகையில், கேப்டன்சி பொறுப்பை ஏற்றதன் காரணமாக தோனி தனக்குள் இருந்த பேட்ஸ்மேனை இந்திய அணிக்காக தியாகம் செய்துவிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர் மட்டும் கடைசி வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி இருந்தால், சர்வதேச கிரிக்கெட் சாதனைகளில் தோனியின் பெயர் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

இலங்கையை மிரள வைத்த பங்களாதேஷ்.. பட்டையை கிளப்பிய ஷகிபுல் ஹசன் படை

தற்போது தோனியின் கேப்டன்சி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். 

அந்த விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசுகையில், இந்திய கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்சியை இனி எந்த கொம்பனாலும் தொட முடியாது. இதுவரை எத்தனையோ கேப்டன்கள் வந்திருக்கிறார்கள். இனியும் வரப் போகிறார்கள். ஆனால் தோனியின் கேப்டன்சிக்கு அருகில் கூட ஒருவராலும் வர முடியாது என்றே நினைக்கிறேன்.

தோனி தனது கேப்டன்சி காலத்தில் மட்டும் 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இதனைவிட பெரிய வெற்றிகளை எந்த கேப்டனாலும் இந்திய கிரிக்கெட்டில் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். 

2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று தோனி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு பின் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT