ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த பிக்குமார் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடிக்கின்றது.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், வெள்ளிக்கிழமையான இன்றும் (16) இரண்டாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று வியாழக்கிழமை (15) மாலை ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணியில் கலந்துகொண்ட பௌத்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு எதிரே உள்ள நடைபாதையில் தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக நேற்றுப் பிற்பகல் நடைபயணமாக ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள், ஞானசார தேரரின் விடுதலை குறித்து அரசாங்கம் விரைந்து தீர்க்கமான முடிவொன்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேரில் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, ஞானசார தேரரை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் பிக்குமார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT