கட்டு கட்டாக பணம்... சத்தியமா இது என்னோட காசு... கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி!

இரவு 11.30 மணிக்கு மேலும் கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

கட்டு கட்டாக பணம்... சத்தியமா இது என்னோட காசு... கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி, காங்குப்பம் கிராமம், மகாதேவமலைக்கு செல்லும் வழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ் என்பவர் வீடு உள்ளது. 

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடராஜ் வீட்டுக்கு ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டி இருந்தது. அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, அதிகாரிகள் அந்த வீட்டுக் கதவை திறக்க மணிக் கணக்கில் காத்திருந்தனர். இரவு 11.30 மணிக்கு மேலும் கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரூ.7 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் முதியவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால் மூதாட்டி மாடியில் இருந்த பணம் என்னுடையது அல்ல; தரை தளத்தில் இருந்ததே என்னுடைய பணம்.

தாலி மேல சத்தியமா என்னோட காசு என ஆவேசமாக கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT