விராட் கோலி, ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம்

இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள் என்றும், சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதே இலக்கு என்றும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளின் மாஸ்டர்கள் என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், ஐந்து டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய தொடர் தங்களுக்கு ஒரு கடுமையான சவாலாக இருக்கும் எனக் குறிப்பிட்ட சான்ட்னர், நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் கோலியும் ரோகித்தும் தற்போதும் மிகச் சிறந்த வீரர்களாகத் திகழ்வதாகக் கூறினார்.

கடந்த காலங்களில் நியூசிலாந்து ஆடுகளங்கள் இவ்விரு வீரர்களுக்கும் சாதகமாக அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இம்முறை தங்களது சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதே பிரதான இலக்கு என்றும் தெரிவித்தார்.

மேலும், 2027 உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகும் நோக்கில் இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளிலும், இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளிலும், அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. இப்போட்டிகள் மூலம் உலகக் கோப்பைக்கான வலுவான அணி கட்டமைப்பை உருவாக்க முடியும் என சான்ட்னர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -