தலவாக்கலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தலவாக்கலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  அவர்களில் 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மற்றைய 23 வயதுடைய இளைஞன்  மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், வட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இருவர் வெட்டுக்காயங்கள் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT