மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில், 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி அநு குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு பிணை வைப்புத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தத் திருத்தங்களுக்கு அமைவான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செலுத்தப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT