34,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிம்புலா பனீஸ்

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

34,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிம்புலா பனீஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தம்புளை பிரதேசத்தில் கிம்புலா பனீஸ் 34, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த பனிஸை ஜெர்மன் பிரஜைகள் சிலர் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இடையில் இந்த பனிஸை கொள்வனவு செய்வது தொடர்பில் ஏலம் நடைபெற்றுள்ளது.

இந்த ஏல விற்பனையில் ஜெர்மனிய பிரஜைகள் 34, 600 ரூபாய் விலையை நிர்ணயித்து அதனை கொள்வனவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை அப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கலேபிந்துனுவெவ பகுதியில் இவ்வாறான ஓர் ஏல விற்பனையில் ஒரு கிம்புலா பனிஸ் 22200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT