அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமான 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாயை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், பணம் அச்சடிப்பது மற்றும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதால், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே உரிய தொகையை சேமிக்க   முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT