ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தாமதமின்றி ஆசிரியர்களின் சம்பள உயர்வை  வழங்க முடியுமென  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தாமதமின்றி ஆசிரியர்களின் சம்பள உயர்வை  வழங்க முடியுமென  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

அதன் கீழ் ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர் மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர் வழங்கவுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT