எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருட்களின் புதிய விலை விவரம்

92 ஒக்டேன் பெட்ரோல் 50 ரூபாயினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலை 470 ரூபாயாகும்.

95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT