இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

ஜுன் 30, 2023 - 14:39
இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 165 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 168 ரூபாயாகும்.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 02 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 137 ரூபாயாகும்.  

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!