மகளை துன்புறுத்தி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட தந்தை கைது 

தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மகளை துன்புறுத்தி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட தந்தை கைது 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மனைவி வெளிநாடு சென்ற பின்னர் தனது நான்கு வயது மகளை கொடூரமாக தாக்கி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட குற்றச்சாட்டில் 27 வயதுடைய  தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த நபரின் மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில், சந்தேக நபரான தந்தை மற்றும் அவரது பெற்றோரிடமும் சிறுமி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -