சீனப் பிரஜையின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றப் பின்னணி அம்பலம்: நாடு கடத்தக் கோரும் சீனா

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஷென் ரிச்சர்ட் கொழும்பில் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீனப் பிரஜையின் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றப் பின்னணி அம்பலம்: நாடு கடத்தக் கோரும் சீனா
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகளுடன் தொடர்புடைய ஷென் ரிச்சர்ட் என்ற 39 வயது சீனப் பிரஜை கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீன அரசாங்கத்தால் ஏற்கெனவே இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது இவர் பிடிபட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்சவின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்டபோது விசாரணை அதிகாரிகளுக்கு 20,000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாகக் கொடுத்து தப்பியோட சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்படி, இவர் மீது சீனா முதன்முதலாக 2017ஆம் ஆண்டில் கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணித்த பின்னர், 2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இவர் நுகேகொடையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரிடமிருந்து மூன்று கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், வனுவாட்டு தீவு நாட்டால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு மட்டுமே தனக்குரியது என அவர் கூறியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை உடனடியாகத் தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் தொடர்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT