அனோஜனுக்கு கிடைத்த நிம்மதி! உயிர் வாழும் உரிமைக்காகப் பாடுபட்டவர்களுக்கு சஜித் நன்றி

சவூதி அரேபியாவில் இலங்கை பொறியியலாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

அனோஜனுக்கு கிடைத்த நிம்மதி! உயிர் வாழும் உரிமைக்காகப் பாடுபட்டவர்களுக்கு சஜித் நன்றி
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை பொறியியலாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்ய அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்வதற்காக அர்ப்பணிப்புடன் முன்னின்று செயற்பட்ட சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டக் குழுவினருக்கும், இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் தமது மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்விடயம் தொடர்பாகத் தாமும் தமது குழுவினரும் தம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தமை குறித்து மனநிறைவு அடைவதாகத் தெரிவித்தார். 

அத்துடன், இத்தீர்மானத்தை மேற்கொண்ட சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்துக்கும் அந்நாட்டு மன்னருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT