மாவனெல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குறித்த நபரின் தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவனெல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மாவனெல்ல, பதியதொர பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, ​​மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், குறித்த நபர் அவரைத் தாக்க முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த நபரின் தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT