குருந்தி விகாரை காணியை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை  


குருந்தி விகாரை காணியை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை  
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். 

விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு பணிப்பரை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிந்தது.  விகாரையை சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதால் அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது பொறுத்தமற்றதெனவும் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போதைக்கு அரச காணிகளை பகிர்ந்தளித்தாலும் பகிர்ந்தளிக்காவிட்டாலும் தவறாக பலவந்தமாக காணிகள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிந்துள்ளது. அதனால் மேற்படி காணிகளின் உரிமத்தை பிறருக்கு வழங்கக்கூடாது எனவும் அவரது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளரினால் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு 2023 ஜூன் 15  திகதியிடப்பட்ட பதில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குருந்தி விகாரையானது, இலங்கையர்களான எமது தொல்பொருள் சின்னமாகும். அதனால் குருந்தி விகாரையின் காணிகளை ஏனையவர்களுக்கு வழங்குவதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும்போதும் 1985களில் காடுகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்கள் அவ்வண்ணமே பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் 2023.06.08 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  குருந்தி விகாரை மற்றும் திரியாய பிரதேச விகாரை இடிபாடுகள் ஆகிய இரண்டையும் பற்றி ஆலோசிக்கப்பட்டதெனவும் ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொண்ட தவறான அறிக்கையிடலே பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் குருந்தி விகாரையை அண்மித்த விவசாய காணிகளில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தேடியறிந்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு முல்லைத்தீவு  மாவட்டச் செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்துகொண்டு அவற்றை மாவட்டச் செயலாளரின் பொறுப்பின் கீழ் வைத்துக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

அதேபோல் நேபாளத்தின் லும்பினி மகா தேவி விகாரையின் அகழ்வு பணிகளை நடத்திய பேராசிரியர்  ரொபின் கனின்ஹேமின் உதவிகளை பெற்றுக்கொண்டு மகா விகாரை பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளரினால்  தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT