பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரியாத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிராந்திய வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்களும் தமது பயண அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. 

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரியாத்துக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது பயணிகள் விமான சேவைகளை நாளை சனிக்கிழமை (10) வரை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கு தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, உலகெங்கிலுமிருந்து ரியாத் நகரை நோக்கி இயக்கப்படவிருந்த 300க்கும் மேற்பட்ட சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிராந்திய வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்களும் தமது பயண அட்டவணைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ரியாத் நோக்கிய விமானப் பயணங்களை நாளை வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT