பங்களாதேஷ் திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு: சொந்த ஊரில் வெடித்த வன்முறைப் போராட்டங்கள்

கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான எழுச்சியால் தனது ஆட்சியை இழந்த பின்னர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா, அங்கிருந்து மீண்டும் பங்களாதேஷிற்குத் திரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே இந்தப் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பங்களாதேஷ் திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு: சொந்த ஊரில் வெடித்த வன்முறைப் போராட்டங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எதிர்வரும் டிசம்பர் மாதம் நாட்டிற்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அவரது சொந்த ஊரான கோபால்கஞ்சில் (Gopalganj) அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்களின்படி, கத்திகள் மற்றும் ஈட்டிகளை ஏந்தியவாறு வீதிகளில் இறங்கிய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், பொலிஸ் வாகனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது, பொலிஸாரின் கவச வாகனமொன்றுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், பொலிஸ் சோதனைச் சாவடியொன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான எழுச்சியால் தனது ஆட்சியை இழந்த பின்னர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா, அங்கிருந்து மீண்டும் பங்களாதேஷிற்குத் திரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே இந்தப் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது தனது அரசாங்கம் முன்னெடுத்த ஒடுக்குமுறையின் போது இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2025 ஆம் ஆண்டு நவம்பரில் ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

எவ்வாறாயினும், இக்குற்றச்சாட்டுகளையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் நிராகரித்துள்ள 79 வயதான ஷேக் ஹசீனா, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் டிசம்பர் மாதம் நாட்டிற்குத் திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளப் போவதாகக் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது. மேலும், ஹசீனா நாட்டிற்குத் திரும்புவதற்கு வசதியாகக் கடவுச்சீட்டு (Passport) வழங்குமாறு லண்டனைத் தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமொன்று ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஹசீனாவை நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான சட்ட நடைமுறைகளை பங்களாதேஷ் நிறைவு செய்துள்ளதாகவும், இனி இது குறித்த முடிவு இந்தியாவின் கையிலேயே உள்ளதாகவும் பங்களாதேஷ் சட்ட அமைச்சர் மொஹமட் அசாதுஸ்ஸமான் (Mohammed Asaduzzaman) சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பான முன்னேற்றத்தை, பிரதமர் தாரிக் ரஹ்மானின் (Tarique Rahman) இந்தியப் பயணத்துடன் பங்களாதேஷ் தொடர்புபடுத்தியுள்ளது. ஹசீனா மற்றும் டாக்கா அரசாங்கத்தினால் தேடப்படும் ஏனைய நபர்களைத் திருப்பி அனுப்புவது, குறித்த பயணத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்க உதவும் என பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷிடமிருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT