வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, மத்துகம மற்றும் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹோமாகம - கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் - கண்டி வீதியின் கீழ் புலாகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர் கிதுல்ஹிதியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர்.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ - அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT