ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

கட்சியின் தவிசாளராக சரத் பொன்சேகாவும், தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும், பொருளாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன சிரேஷ்ட உப தவிசாளராகவும், வடிவேல் சுரேஷ் பிரதி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உமா சந்திரா பிரகாஸுக்கும் பிரதி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT