2 ஆண்டுகளுக்கு பின் இன்று குறைந்த பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்தன.

Mar 15, 2024 - 07:11
Mar 15, 2024 - 13:30
2 ஆண்டுகளுக்கு பின் இன்று குறைந்த பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்தன.

ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. 

அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த விலை குறைப்பு இன்று (15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக மத்திய மந்திரி மேலும் கூறியிருந்தார். இதன் மூலம் சுமார் 2 ஆண்டு களுக்குப்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக இருந்தது. இது இன்று முதல் ரூ.94.72 ஆக விற்பனையாகிறது. இதைப்போல டீசல் விலையும் ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.100.73 ஆக குறைந்துள்ளது. இதைப்போல டீசல் விலையும் ரூ.94.33-ல் இருந்து ரூ.92.33 ஆக குறைந்திருக்கிறது.

டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக காணப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.94.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக இன்று குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.73 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.100.73 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை சென்னையில் ரூ.94.33-ல் இருந்த நிலையில், இன்று ரூ.92.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.