டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்தியா இம்மாநாட்டை 4-வது முறையாக தலைமையேற்று நடத்துகிறது.
உலகப் பொருளாதாரத்தில் சுமார் நாற்பது சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் இருபத்தாறு சதவீதத்தையும் கொண்டுள்ள இந்த இருபத்தொரு நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டையொட்டி, டெல்லியில் சுமார் 31 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்தும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நாளை சந்திக்கிறார். எல்லைப் பகுதிகளில் தற்போது சுமுக நிலை நீடித்தாலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சூழல் குறித்து இதில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி இம்மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ யோ குட்டெரஸ் உள்ளிட்ட தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருந்தன. அதேவேளையில், பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான மோதல் விவகாரமும் இம்மாநாட்டில் பேசுபொருளாக மாற வாய்ப்புள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.