ஆடையகத்தின் உடைமாற்றும் அறையில் 18 வயது யுவதி கொலை

கடந்த சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் கடையை மூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஏனைய ஊழியர்கள், உடைமாற்றும் அறையைச் சோதனையிட்ட போது ஷப்னம் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆடையகத்தின் உடைமாற்றும் அறையில் 18 வயது யுவதி கொலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியத் தலைநகர் டெல்லியிலுள்ள ஆடையகமொன்றின் உடைமாற்றும் அறையில் 18 வயது யுவதி ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள 'வஸ்த்ரா மஹால் டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்த ஷப்னம் என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் கடையை மூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஏனைய ஊழியர்கள், உடைமாற்றும் அறையைச் சோதனையிட்ட போது ஷப்னம் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேற்கு டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஷப்னமை, அவரது நண்பரான சூரஜ் என்ற இளைஞரே கொலை செய்துள்ளதாகக் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சூரஜ் குறித்த யுவதியைக் காதலித்து வந்ததாகவும், அதனை ஷப்னம் நிராகரித்த நிலையில் கடந்த காலங்களிலும் அவர் யுவதியை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஷப்னமின் பணி நேரம் முடிவடையவிருந்த நிலையில் சனிக்கிழமை மாலை குறித்த ஆடையகத்திற்கு வந்த சூரஜ், தன்னுடன் பேச வேண்டும் எனக் கூறி அவரை உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் யுவதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், குறித்த ஆடையகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி (CCTV) காணொளிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT